J

Jebamae Jeyam Jebamae

ஜெபமே ஜெயம் ஜெபமே ஜெயம்

ஜெபமே ஜெயம் ஜெபமே ஜெயம்
இயேசு ஜெபமே ஜெயம்
அபயம் அபயம் என்று அலைந்திடும் மாந்தர்க்கு
ஆனந்த வாழ்வளிக்கும் ஆண்டவர் இயேசுவின்
ஜெபமே ஜெயம் இயேசு ஜெபமே ஜெயம்

ஒரு மனதோடு வந்து உன் திரு நாமம் போற்றி
துதி கீதம் பாடிடும் தூயவர் வாழ்வினிலே
கதி நீரே மதி நீரே (2)
கண்ணீரை துடைப்பவரே எந்நாளும் இவ்வுலகில்
இணையில்லா இன்பம் பெற

முழு ஆத்மாவோடும் முழு இருதயத்தோடும்
உம் மீது அன்பு கூர்ந்து உன்னத வாழ்வு பெற
தன்னை போல பிறர் மேலே
அன்பு கூர்ந்து வாழ்ந்தென்றும் தரணியில்
தாழ்வின்றி தழைத்தோங்கி சிறந்திடவே