ஜீவனுள்ள காலம் வரை
ஜீவனுள்ள காலம் வரை இயேசுவை நான் துதிப்பேன்
வெற்றியிலும் தோல்வியிலும் இயேசுவை நான் நினைப்பேன்
அவரின்றி நான் இல்லை வாழ்வில்லை அவரின்றி இன்பங்கள் ஏது?
அவரின்றி ஒளியில்லை உயிரில்லை அவரின்றி செல்வங்கள் ஏது?
உலகத்தில் நான் வாழும் வரை இயேசுவின் வார்த்தைகள் வழிநடத்தும்
தாகத்திலே நான் இருந்தால் இயேசுவின் நினைவு என் பசியமர்த்தும்
என்னுயிரை மீட்பதற்கு தன்னுயிரைத் தந்தார்
இன்னும் ஏன் தாமதம் என் பின்னே வா என்றார்
என்னிடத்தில் இயேசு சொன்னார், நானே உந்தன் மீட்பு
படைப்புக்களின் அழகையெல்லாம் இரசிக்கவே விழிகளை நமக்குத் தந்தார்
பகிர்ந்து கொண்டு வாழ்ந்திடவே இணையற்ற செல்வங்கள் நமக்குத் தந்தார்
மண்ணுலக இச்சைகளை விட்டுவிடு என்றார்
விண்ணுலகில் என் மடியில் பணிந்திடுவாய் என்றார்
என்னிடத்தில் இயேசு சொன்னார், நானே உந்தன் மீட்பு