J

Jehovahnishi Jehovanishi

யேகோவா நிசி யேகோவா நிசி

யேகோவா நிசி யேகோவா நிசி
யேகோவா நிசி யேகோவா நிசியைப் போற்றிப் பாடுவோம்
எங்கள் கொடி வெற்றிக்கொடியே

வீறு கொண்டெழுவீர் இயேசு வீரரே
மாறு கொண்டு மன்னர் முன்னே செல்கிறார்
சீறியெழும் சிங்கங்கள் நாம் அல்லவோ?
மீறுமெதிரி சதிகளுக்கு மிரளவா?
யூத சிங்கம் யுத்த சிங்கமே

கர்த்தர் துணை நின்று யுத்தம் செய்வாரே
கலங்கி நிற்க காரணங்கள் இல்லையே
கைகளைத் தளர்ந்திடாமல் தாங்கியே
கர்த்தர் இயேசு சத்ய ஆவி நிற்கிறார்
கர்த்தர் வல்ல யுத்த வீரரே

நமக்கிருக்கும் இந்த பெலன் போதுமே
நாதன் இயேசு அனுப்புவதால் போவோமே
பட்டயமோ புயபலமோ தேவையா?
பரமதேவ ஆவி நம்மில் இல்லையா?
ஜீவ தேவ சேனையல்லவா?

முடிந்ததென்று முழங்கி நிற்கும் வீரனே
முற்றுமவனை முறியடித்த தீரனே
சிலுவையில் சிரம் நசித்த சீலனே
சிலுவைக் கொடியை ஏற்றும் தேவபாலனே
வெற்றி வாகை சூட்டிப் பணிகிறோம்

அல்லேலூயா தேவ நாமம் வாழ்கவே
அல்லேலூயா இயேசு ராஜா வருகவே
அல்லேலூயா ஆவி புகழ் ஓங்கவே
அல்லேலூயா தேவ படை வெல்கவே
வாழ்க வாழ்க வாழ்க வாழ்கவே