K

Karthar Unnatharae

கர்த்தர் உன்னதரே

கர்த்தர் உன்னதரே
மகிமையில் சிறந்தவரே
மகிமையின் தேவன் செயல்களை
நினைத்து எதனை செலுத்திடுவாய்
எதனை செலுத்திடுவாய்

ஆத்துமாவை காத்தனரே
அற்புதம் செய்தனரே
மறவாது என்றென்றுமாய்
அன்பு கூர்ந்திடுவாய்

மகிமை உன்னைல் வெளிப்படவே
தம்மையே தந்தனரே
அனுதினமும் அவர் நாமமதை
சேவித்து வழி நடப்பாய்

உந்தனுக்காய் தேவகரம்
யாவையும் முடித்ததுவே
அவரது செய்கை அனைத்தையுமே
பூவினில் சாற்றிடுவாய்

நீதியின் நல் வாசல்களை
திறந்துமே நடத்தினாரே
துதிகளுடன் அவர் நாமத்தை
என்றுமே தொழுதிடுவாய்