கொல்கதா கொலைமரம்
கொல்கதா கொலைமரம்
பார்க்கவே பரிதாபம்
துங்கன் இயேசு நாதனார்
தொங்கும் காட்சி பார் இதோ
கை காலில் ஆணி பீறிட்டே
குருதி புரண்டு ஓடிற்றே
முள்ளினால் ஓர் கிரீடமே
சூட்டினார் மா பாதகர்
பாவியே நீயும் ஓடி வா
பாசம் கொண்டே அழைக்கிறார்
சிலுவைக் காட்சி காண வா
சீரடைவாய் நாடி வா
கல்வாரி நாதர் இயேசுவை
பற்றி நீயும் வந்திட்டால்
தூசியான உன்னையும்
மேசியா கைத் தூக்குவார்