K

Konjum Kili Pesumae

கொஞ்சும் கிளி பேசுமே

கொஞ்சும் கிளி பேசுமே உந்தன் அன்பை
கூவும் குயில் பாடுமே கல்வாரி அன்பை
எத்தனையோ மீறுதல் இயேசுவே ஆறுதல்

விந்தைக் கிறிஸ்து இயேசுவே உம்மைக்
காண கண்கள் தேடுதே
தந்தையே உம் அன்பைப் பாட
எந்தன் நெஞ்சம் ஏங்குதே

வேடன் விரித்த வலையில் சிக்கி
பரிதவிக்கும் கலை மானைப் போல்
சாத்தானின் பிடியில் இருந்து
என்னை மீட்ட ரட்சகனே

சிறகொடிந்த பறவை போல
நம்பிக்கையை இழந்த போது
என்னைக் கரம் பிடித்தவரே
என்றும் தாங்கி நிற்பவரே

திசை மாறிய கப்பல் போலே
சீர்குலைந்து தவிக்கும் போது
வழிகாட்டும் கலங்கரை விளக்காய்
வாழ்வு தந்த நாயகனே

நாதியில்லை என்று சொல்லி
பாதியில் கைவிட்டது சொந்தம்
ஆதியில் உம் அநாதி சிநேகம்
அதுவே என் நித்திய பந்தம்
ஆண்டவரே நீர் என் சொந்தம்