மனிதனே மனிதனே
மனிதனே மனிதனே
மறவாதே இயேசுவை
உன்னை மீட்க தன்னை தந்த
இயேசு உன்னை அழைக்கின்றார்
இயேசு உன்னை அழைக்கின்றார்
இயேசு உன்னை அழைக்கின்றார்
இயேசு உன்னை அழைக்கின்றார்
சிரசில் முள்முடி தரித்த முகத்தை
சிலுவை மரத்தில் காணாயோ
உனக்காய் மரித்தார் உத்தமர் இயேசு
உன்னில் அவர்க்கு இடமில்லையோ
கால்களில் ஆணிகள் கரங்களில் ஆணிகள்
காயம் ஏற்ற கரம் நீட்டி
கனிவாய் உன்னை அழைக்கின்றார்
கர்த்தர் உன்னை அழைக்கின்றார்
நிலையில்லா உன் ஜீவன் காக்க
விலையில்லா தன் ஜீவன் தந்தார்
எல்லையில்லா தன் அன்பை ஈன்று
தொல்லையில்லா தன் வாழ்வை தந்தார்
கசையடி உடலில் பட்டார்
வசை மொழி யாவும் ஏற்றார்
ஆணி பாய்ந்த கரம் நீட்டி
அன்பாய்(கனிவாய்) உன்னை அழைக்கின்றார்
கர்த்தர் உன்னை அழைக்கின்றார்