Y

Yesu Thevan

இயேசு தேவன் இருக்கும் போது

இயேசு தேவன் இருக்கும் போது இன்னல் நமக்கேது
இருள் அகற்றும் அருள் மொழியாம் கிறிஸ்து புகழ் பாடு
கருணையுள்ள தேவன் நம்ம கர்த்தர் இயேசு ராஜன் – 2

கொல்கொதா குருசினில் பொங்கும் இயேசு
குருதியால் நம் பாவம் நீங்கும்
கல்லான இதயங்கள் மாறும் நல்ல
கனிவான உள்ளம் உருவாகும்
மனமாற்றம் மறுரூபம் மகிமையும் அடைந்திடுவோம்
புவிவாழ்வு முடிகையிலே பொன்னகரம் சேர்ந்திடுவோம்
தூதர்கள் சூழ கரம் தனிலே
துன்பங்கள் நீங்கி வாழ்ந்திடுவோம்

புயல் வெள்ளம் போல் மோதும் துன்பம்
மாறி புவி வாழ்வில் பொங்கிடும் இன்பம்
கடன் தொல்லை கஷ்டங்கள் நீங்கும்
கதிரின் ஒளிபட்ட பனிபோல நீங்கும்
வியாதிகளும் வேதனைகளும்
வறுமைகளும் மாறிவிடும்
நோய் நொடியும் பேய் பிடியும்
நொடிப் பொழுதில் ஓடிவிடும்
வல்லவன் இயேசு கிருபையினால்
வாழ்வில் வசந்தம் மலர்ந்துவிடும்

நலங்கெட்டு தடுமாறும் போதும் இயேசு
உடை தொட்டு குணமாள் மாது
தொழு நோயோர் குரல் கேட்டு நின்றார் அவரை
தொழுதோர்கள் சுகம் பெற்று சென்றார்
அருள் வழங்கும் தேவன் அவர் அன்பு வழி காட்டுபவர்
மரணமதின் கூர் உடைத்து மகிமையிலே சேர்க்கிறவர்
ஆண்டவர் இயேசு மொழியன்றோ
அகிலம் வாழும் வழியன்றோ