மகிழ்ந்து களிகூறுங்கள்
மகிழ்ந்து களிகூறுங்கள்
இயேசு இராஜன் பிறந்ததினால்
மகிழ்ந்து களிகூறுங்கள்
விண்ணுலகம் துறந்து மண்ணுலகம் உதித்து
தம்மைத் தாமே வெறுத்து அவர் நம்மை மீட்க வந்தார்
பாவமறியா அவரே ஜீவன் தந்திடவே
நித்திய வாழ்வு நமக்களிக்க இயேசு இராஜன் பிறந்தார்
வாழ்ந்து காட்டிய வழியை மகிழ்ந்து பின்பற்றியே
வேறுபலரை அவர் மந்தையில் இணைத்து பலன் அடைவோம்