நான் என்ன செய்ய வேண்டுமென்று
நான் என்ன செய்ய வேண்டுமென்று
சொல்லித் தாரும் தெய்வமே
அதை செய்து முடிப்பதற்கு
சக்தி தாரும் தெய்வமே
எதை நான் பேச வேண்டும் என்று
கற்றுத் தாரும் தெய்வமே
எங்கு நான் செல்ல வேண்டும் என்று
வழிநடத்தும் தெய்வமே
எதற்காக ஜெபிக்க வேண்டும் என்று
அறிவுரை சொல்லும் தெய்வமே
உம்மைப்போல சேவைகள் செய்வதற்கு
அருள்தாரும் தெய்வமே
ஜெபம் செய்யும்போது பதிலளிக்கும்
பரலோக தந்தையே
ஆபத்து நேரும் உதவி செய்யும்
அன்புள்ள தெய்வமே