N

Naatha Um Thirukarathil

நாதா உம்திருக் கரத்தில்

நாதா உம்திருக் கரத்தில் இசைக்கருவி நான்
நாள்தோறும் பயன்படுத்தும் உந்தன் சித்தம் போல்

ஐயா உம் பாதம் என் தஞ்சமே
அனுதினம் ஓடி வந்தேன்
ஆனந்தமே ஆனந்தமே

எங்கே நான் போக உம் சித்தமோ
அங்கே நான் சென்றிடுவேன்
உம் நாமத்தில் ஜெயம் எடுப்பேன்

புதுப்பாடல் தந்து ஆசீர்வதியும்
பரவசமாகிடுவேன்
எக்காளம் நான் ஊதிடுவேன்

நிந்தைகள் நெருக்கம் துன்பங்களில்
துதி பாடி மகிழ்ந்திருப்பேன்
கிருபை ஒன்றே போதுமைய்யா

ஊரெல்லாம் செல்வேன் பறைசாற்றுவேன்
உம் நாமம் உயர்த்திடுவேன்
சாத்தான் கோட்டை தகர்த்திடுவேன்