N

Nanri Sollvom Yesuvukku

நன்றி சொல்வோம் இயேசுவுக்கு

நன்றி சொல்வோம் இயேசுவுக்கு
தமிழ் பண்ணிசைப்போம் இயேசுவுக்கு
நம்மை அவர் கண்ணோக்கினார் உயிரைத் தந்து மீட்டார்
எந்நாளுமே நம்மை அவர் அரணாய் நின்று காப்பார்

இயேசு என்னும் நாமமதைச் சொல்லச் சொல்ல
உள்ளம் புத்துணர்ச்சியாலே துள்ளத் துள்ள
உலகம் தரும் இடர்கள் எல்லாம்
ஒருநொடிப் பொழுதில் மாறிவிட
ஆடிப்பாடி நாளும் ஆண்டவரைப் போற்றுவோமே
அக்களிப்போம் நாளும் இன்னிசைகள் மீட்டுவோமே
என்றும் இனி நாம் பாடுவோம் அல்லேலு அலேலூயா
தொல்லையில் தோல்வியில்லை அல்லேலு அலேலூயா

பாரவோனின் தண்டனைக்குத் தப்பிவித்தார்
நம்மை பரிசுத்த பூமியெங்கும் வாழவைத்தார்
மன்னா என்னும் உணவைத் தந்து
பசியையும் தாகத்தையும் போக்கிவைத்தார்
கர்த்தரவர் இன்றும் நம்மிடையே வாழுகின்றார்
அன்பு வழி வாழ நாளும் நம்மைத் தூண்டுகின்றார்
என்றும் இனி நாம் பாடுவோம் அல்லேலு அலேலூயா
தொல்லையில்லை தோல்வியில்லை அல்லேலு அலேலூயா