சிங்காசனத்தில் வீற்றிருக்கும்
சிங்காசனத்தில் வீற்றிருக்கும்
பரிசுத்தரே பரிசுத்தரே
ஆராதனை உமக்கு ஆராதனை
ஆராதனை உமக்கு ஆராதனை
கேருபீன்கள் சேராபீன்கள்
போற்றிடும் எங்கள் பரிசுத்தரே
ஏழு குத்து விளக்கின் மத்தியிலே
உலாவிடும் எங்கள் பரிசுத்தரே
ஆதியும் அந்தமும் ஆனவரே
அல்பா ஒமேகாவும் ஆனவரே
இருபுறமும் கருக்குள்ள பட்டயத்தை
கரங்களில் உடையவரே
பரிசுத்தமும் சத்தியமும் – தாவீதின்
திறவுகோலை உடையவரே
அக்கினி ஜுவாலை போன்ற கண்களையும்
வெண்கல பாதங்களை உடையவரே