N

Neer Illamal

நீர் இல்லாமல் வாழ்வில்லை

நீர் இல்லாமல் வாழ்வில்லை
உம்மை நினைக்காத வாழ்வில்லை
அன்பின் தெய்வமே அருமை இரட்சகரே

உம்மைப்போல மாறிவிட ஆசை
உலகத்தை நான் வெறுக்காமல் போச்சே
என்ன நான் செய்வேன் எதை
எனது அருமை இயேசுவே

உம்மைப் பிரிந்து நான் எங்கே போவேன்
ஒளியான மெய் தேவன் நீரே
உம்மை மறந்தே போனாள்
இருளில் பங்காடைவேனே

ஆசையும் இச்சையும் ஒழிந்து போகும்
ஆண்டவரே நீர் சொல்லி வைத்தீரே
அழியா உன் வழி பற்றி
அன்புடன் நானும் நடந்திடுவேன்