உன்னைத் தேடி வந்த இயேசுவுக்கு
உன்னைத் தேடி வந்த இயேசுவுக்கு
நீ நன்றி சொல்லு மகனே மகளே – 2
நீ நன்றி சொல்லி வாழ்ந்து வந்தாள்
நலம் கிடைக்கும் வாழ்விலே – 2
மண்ணின் மீது பிறந்து வளர்ந்தாய்
பாவம் என்னும் சேற்றில் புரண்டாய் – 2
உன்னை மீட்கவே பாடுகள் பட்டார்
உனக்காகவே ஜீவன் தந்தார் – 2
உண்மையுள்ள நெஞ்சு உடையவர்
உறுதியாய் உன்னை காப்பார் – 2
வல்லமையில் வாக்களித்த
அவர் வசனத்தை நிறைவேற்றுவார் – 2
நீதி என்னும் செங்கோலை உடையவர்
நிச்சயம் நியாயம் தீர்ப்பார் – 2
அந்த நாட்களில் தப்பித்துக்கொள்ள
அண்டியிடுவாய் அவர் பாதையே – 2