ஒவ்வொரு மனிதனும் என் நண்பன்
ஒவ்வொரு மனிதனும் என் நண்பன்
ஒவ்வொரு மனிதனும் சகோதரன்
ஒவ்வொரு மனிதனும் சகோதரன்
என் சகோதரன் என் சகோதரன்
நோயில் தவிப்பவன் என் நண்பன்
ஆபத்தில் இருப்பவன் சகோதரன்
பாவத்தில் உழல்பவன் என் நண்பன்
சாபத்தில் வாழ்பவன் சகோதரன்
காரணம் அவனும் மனிதன்
இயேசு அவனையும் நேசிக்கின்றார்
அழகை இழந்தவன் என் நண்பன்
அறிவை இழந்தவன் சகோதரன்
ஆதரவிழந்தவன் என் நண்பன்
வறுமையில் வாழ்பவன் சகோதரன்
காரணம் அவனும் மனிதன்
இயேசு அவனையும் நேசிக்கின்றார்
சிறையில் வாழ்பவன் என் நண்பன்
தனிமையில் தவிப்பவன் என் சகோதரன்
ஊனமாய்ப் பிறந்தவன் என் நண்பன்
ஊக்கமிழந்தவன் சகோதரன்
காரணம் அவனும் மனிதன்
இயேசு அவனையும் நேசிக்கின்றார்
எந்த மதமானாலும் என் நண்பன்
எந்தக் குலமானாலும் சகோதரன்
எந்த நாட்டு மனிதராயினும் என் நண்பன்
எந்த மொழி பேசினாலும் சகோதரன்
காரணம் அவனும் மனிதன்
இயேசு அவனையும் நேசிக்கின்றார்