பாவி என் மேலே கிருபையாய்
பாவி என் மேலே கிருபையாய் இருந்தருளும்
பாவத்தை பாராத சுத்தக் கண்ணனே
தாழ்மையுள்ள யாவருக்கும்
கிருபையை அள்ளித் தருபவரே
மார்பில் அறைந்து ஓடிவந்தேன்
மன்னித்து என்னை ஏற்றருளும்
வெறுமை எல்லாம் மாற்றிடுமே
வறுமை எல்லாம் நீக்கிடுமே
முத்திரை மோதிரம் தந்திடுமே
முத்தங்களால் என்னை அணைத்திடுமே
ஒருவரும் சேரா ஒளியினிலே
வாசம் செய்திடும் உன்னதரே
என்னை உம்மில் இணைத்தீரே
அதுதான் உமது கிருபையே