தேற்றரவாளன் இயேசுவே
தேற்றரவாளன் இயேசுவே என்னைத் தேடி
வந்த அன்பு தெய்வமே
தாயைப்போல தேற்றுகிறீர் தந்தைப்போல்
தோளில் சுமக்கின்றீர்
வனாந்தரமான வாழ்க்கையிலே
வழியின்றித் தவிக்கும் நேரத்திலே
பகைவர்கள் சூழ்ந்திடும் நேரத்திலே
கடலினில் தரை வழி தந்தவர் நீர்
நன்றி ஐயா உமக்கு நன்றி ஐயா
இருண்ட வாழ்க்கைப் பாதையிலே
இன்னல்கள் சூழ்ந்த நேரத்திலே
இரவிலும் பகலிலும் நீர் எனக்கு
அக்கினி ஸ்தம்பம் மேக ஸ்தம்பம்
நன்றி ஐயா, உமக்கு நன்றி ஐயா
மனுஷரின் வார்த்தைகள் மாராவாகி
மனதினில் துயரங்கள் சூழ்கையிலே
மாராவின் கசப்பை மதுரமாக்கி
மகிமையின் வார்த்தையால் மகிழ்ச்சி தந்தீர்