பசுத்தோல் போர்த்திய புலியா நீ
பசுத்தோல் போர்த்திய புலியா நீ
பயிரை மேயும் வேலியா
வெளியில் ஒரு குணம் கோயிலில் ஒரு குணம்
இதுதான் உந்தன் வாழ்க்கையா
அனலும் இல்லாமல், குளிரும் இல்லாமல்
வாழும் வாழ்க்கையில் பயனில்லை
தேவன்மேல் அன்பும் பிறன்மேல் அன்பும்
வாழ்க்கையில் இருந்தால் பயமில்லை
குடியை தேடி புகையை ஊதி
வாழ்நாள் முழுவதும் களியாட்டம்
ஆலயத்தில் மட்டும் மகா பரிசுத்தம்
பயங்கரமான பாவ குற்றம் – இது
வாயின் வஞ்சகம் வீண் வாக்குவாதம்
மனதில் முழுவதும் மாய்மாலம்
உன்னால் கெட்டுப்போகும் தேவனது நாமம்
கிறிஸ்துவுக்குன்னால் அவமானம்
ஆவியில் நிரம்பி பாஷைகள் பேசி
ஞாயிற்றுக்கிழமையில் ஆராதனை
அடுத்த நாளே பாவத்துக்கு அடிமை
தேவனுக்குன்னால் மனவேதனை
கண்கள் திறந்தால் வெளிச்சமுண்டாகும்
இருளிலிருந்து வெளியே வா
அத்துமா ரட்சிப்பு மிகவும் அவசியம்
இதயத்தை இன்று தேவனுக்கு தா