S

Senaigalin Maa Karthar

சேனைகளின் மா கர்த்தரவர்

சேனைகளின் மா கர்த்தரவர்
யாக்கோபின் தேவனவர்
என்றும் உயர்ந்த அடைக்கலமே
என் நம்பிக்கையின் பெலனே

உணர்கிறாயா உணர்கிறாயா?
உண்மையை நீ உணர்கிறாயா?
உணர்கிறாயா உணர்கிறாயா?
உண்மையை உணர்கிறாயா?

அடைக்கலமே இனி உன் பெலனே
ஆபத்தில் அனுகூலமே
பூமி நிலைமாறி மலை சரிந்தும்
நீ அசைக்கப்படாய் உறுதி

சொல்லுவாயா சொல்லுவாயா?
எப்போதும் நீ சொல்லுவாயா?
சொல்லுவாயா சொல்லுவாயா?
எப்போதும் சொல்லுவாயா?

அமர்ந்திருந்து நீ அறிந்து கொள்வாய்
அவரே தேவனென்று
உனக்காரும் இல்லையே மேதினியில்
இது தாவீதின் அனுபவமே

அனுபவி நீ! அனுபவி நீ!
இது முதல் நீ அனுபவியே
அனுபவி நீ! அனுபவி நீ!
இது முதல் அனுபவியே