சிங்காசனத்தில் வீற்றிருப்பார்
சிங்காசனத்தில் வீற்றிருப்பார்
தேவன் இயேசுக்கிறிஸ்து
துதிகனம் மகிமையெல்லாம்
அவருக்கே செலுத்திடுவோம்
ராஜாதி ராஜன் கர்த்தாதி கர்த்தர்
ஆட்டுக்குட்டி ஆனவரே
உன்னதமானவரே
உலகத்தின் ஒளி நீரே
தேவன் சபையில் வாசமாகி
நடுவிலே உலாவுகின்றார்
அற்புத தேவன் நீரே
அதிசயமானவரே
இயேசுவின் நாமத்தில் பிதாவே உம்மை
தொழுகிறோம் பணிந்திடுவோம்
சர்வ வல்லவரே
பரிசுத்தமுள்ளவரே