S

Siragugalaalae Moodiduvaar

சிறகுகளாலே மூடிடுவார்

சிறகுகளாலே மூடிடுவார்
அரணான பட்டணம் போல காத்திடுவார்
கழுகை போல எழும்ப செய்வார்
உன்னை நடத்திடுவார்
அவர் உன்னை நடத்திடுவார்

எல்ஷடாய் எல்ஷடாய்
சர்வ வல்லமை உள்ளவரே
உன்னை நடத்திடுவார்
அவர் உன்னை நடத்திடுவார்

பாதை அறியாத நேரமெல்லாம்
அதிசயமாய் உன்னை நடத்தி வந்தார்
கரங்களை பிடித்து கைவிடாமல்
உன்னை நடத்திடுவார்

வாக்கு பண்ணப்பட்ட தேசத்திலே உன்னை
கீர்த்தியும் புகழ்ச்சியுமாக்கிடுவார்
சத்துருக்கு முன்பாக உன்னை நிறுத்தி
தலையை உயர்த்திடுவார்

பாதம் கல்லில் இடறாமல்
தூதர்களை அனுப்பிடுவார்
உன்னை காக்க கூட இருந்து
உன்னை நடத்திடுவார்