T

Thalai Saaikum

தலை சாய்க்கும் கல் நீரய்யா

தலை சாய்க்கும் கல் நீரய்யா
மூலைக்கல் நீரய்யா

ஏல் பெத்தேல் இது வானத்தின் வாசல்
என் இயேசையா ஆசீர்வாதத்தின் வாசல்

மேற்கு கிழக்கு வடக்கு தெற்கு
பரம்புவாய் என்றீரே
பூமியின் தூளைப்போல் உன் சந்ததி
பெருகும் என்று வாக்குரைத்தீரே
சொன்னதை செய்யுமளவும்
என்னை கைவிடவே மாட்டீர் – எனக்கு

பூமியின் வம்சங்கள் உனக்குள்
உன் சந்ததிக்குள் ஆசீர்வதிக்கப்படும்
என்று ஆசீர்வாத வாய்க்காலாக
என்னை மாற்றினீரே
சொன்னதை செய்யுமளவும்
என்னை கைவிடவே மாட்டீர் – எனக்கு

செல்லும் இடமெல்லாம் என்னோடு இருந்து
என்னை கனப்படுத்துவீர்
தகப்பன் தேசத்துக்கு திரும்பும் வரையில்
என்னை காப்பாற்றுவீர்
சொன்னதை செய்யுமளவும்
என்னை கைவிடவே மாட்டீர் – எனக்கு