T

Thasanagiya Yakobe

தாசனாகிய யாக்கோபே

தாசனாகிய யாக்கோபே பயப்படாதே திகையாதே

உனக்கு முன்பாக நான் செல்வேன் வழிகள் செவ்வையாக்குவேன்
இதுவரையிலும் காத்திட்டேன் இனியும் காத்திடுவேன்
மறைவிலிருக்கும் பொக்கிஷங்களை உனக்கு தந்திடுவேன்

வலக்கரத்தினால் தாங்கிடுவேன் பெலனை கொடுத்திடுவேன்
வறண்ட நிலத்தின் மேல் ஆறுகளை ஓடச்செய்வேன்
உன் மேல் ஆவியும் ஆசீர்வாதமும் ஊற்றிடுவேன்

தாயைப் போல தேற்றிடுவேன் தந்தை போல் அணைத்திடுவேன்
கால்கள் கல்லில் இடறாமல் கருத்தாய் காத்திடுவேன்
நினைத்திடாத அளவிற்கு நான் உன்னை உயர்த்திடுவேன்

ஆறுகளை நீ கடக்கையிலே உன்னோடு நான் இருப்பேன்
அக்கினி ஜுவாலை உன்னைப் பற்றாமல் காத்துக் கொள்வேன்
உனக்கு எதிராய் எழும்புவோரை நானே சிதறடிப்பேன்