T

Thuthippom Allelujah Paadi

துதிப்போம் அல்லேலூயா பாடி

துதிப்போம் அல்லேலூயா பாடி
மகிழ்வோம் மகிபனைப் போற்றி
மகிமை தேவ மகிமை – தேவ
தேவனுக்கே மகிமை – அல்லேலூயா

தேவன் நம்மை வந்தடையச் செய்தார்
தம்மையென்றும் அதற்காகத் தந்தார்
அற்புதங்கள் செய்யும் சர்வ வல்ல தேவன்
அடைக்கலம் கொடுத்திடுவார்

அஞ்சிடேனே இருளிலே என்றும்
நடமாடும் கொள்ளை நோயைக் கண்டும்
பயங்கரத்திற்கும் பறக்கும் அம்பிற்கும்
பயந்திடேன் ஜெயித்திடுவேன்

தேவன் எந்தன் அடைக்கலமாமே
ஒருபோதும் பொல்லாப்பு வராதே
சர்வ வல்ல தேவன் தாபரமாய் நின்றே
விடுவித்துக் காத்திடுவார்

கூப்பிடும் வேளைகளிலே என்னை
தப்புவிக்க ஆதரமாய் வந்தார்
சிங்கத்தின் மேலே நடந்திடுவேனே
சர்ப்பங்களை மிதித்திடுவேன்

பாதம் கல்லில் என்றும் இடறாமல்
கரங்களில் தாங்கிடுவார் தூதர்
ஒரு போதும் வாதை என் கூடாரத்தை
அணுகாமல் காத்திடுவார்