V

Varathadchanai Kedu

வரதட்சணை கேட்டு கொடுமை

வரதட்சணை கேட்டு கொடுமை செய்யாதே நண்பா
பண ஆசை எல்லா தீங்குக்கும் காரணமாய் இருக்கின்றது

குடும்பத்துக்கொரு பாரமாக தான் இருப்பது போல எண்ணி
கண்ணீரோடு காலம் தள்ளும்
பெண்களை நினைக்க வேண்டும்
மாப்பிள்ளையின் வீட்டார் கேட்ட
பணம் இல்லை என்பதாலே
பெண்ணைப் பெற்ற தந்தையும்
தாயும் கண்ணீர் வடிக்கின்றாரே

நான் கேட்க மாட்டேன்
ஆனால் அப்பாதான் கேட்கிறாரு
என்று சாக்குபோக்கு சொல்லி நழுவி விடாதே பிரதரே
பாவப்பட்ட மாமனாரின் வயிற்றில் அடிக்கவேண்டாம் பிரதரே
பாவப்பட்ட மாமியாரின் வயிற்றில் அடிக்கவேண்டாம் பிரதரே
விக்கிரக ஆராதனையாம் பண ஆசை நமக்கு வேண்டாம்

உன்னை விட்டு விலகுவதில்லை
உன்னைக் கைவிடுவதுமில்லை
என்று சொன்ன இயேசுவை நம்பி
தைரியமாய் திருமணம் பண்ணு
கேயாசியை நினைத்து பாரு யூதாசை நினைத்து பாரு
பண ஆசை இருந்ததாலே இருவரும் அழிந்து போனார்