V

Varavenum Entharasae

வர வேணும் என தரசே

வர வேணும் என தரசே
மனுவேல் இஸரேல் சிரசே
அருணோ தயம் ஒளிர் பிரகாசா
அசரீரி ஒரே சரு வேசா

வேதா கருணாகரா மெய்யான பராபரா
ஆதார நிராதரா அன்பான சகோதரா
தாதாவும் தாய் சகலமும் நீயே
நாதா உன் தாபரம் நல்குவாயே

படியோர் பவ மோசனா பரலோக சிம்மாசனா
முடியாதருள் போசனா முதன் மாமறை வாசனா
இடையர் குடிலிடை மேவி எழுந்தாய்
இமையவர் அடி தொழு மேன்மையின் எந்தாய்

வானோர் தொழும் நாதனே மறையாகம போதனே
கானாவின் அதீதனே, கலிலேய வினோதனே
ஞானாகரமே நடு நிலை யோவா
நண்பா உனத நன்மையின் மகா தேவா

வேதநாயகன் பாட்டிலே மேசியாவொரு காட்டிலே
யூதேயாவெனும் நாட்டிலே யூகமாய் விடை வீட்டிலே
நாதனாயெழும் நம் பெருமானே
நம்பினர் தொழு சரணந் தருகோனே