வானம் பூமியோ?
வானம் பூமியோ? பராபரன் மானிடன் ஆனாரோ? – என்ன இது?
ஞானவான்களே நீதவான்களை ஆ என்ன இது?
பொன்னகர சாளும் உன்னதமே நீளும்
பொறுமை கிருபாசனத்துரை பூபதி வந்ததேததிசயம்
சத்திய சருவேசன் நித்தியக்கிருபை வாசன்
நித்திய பிதாவினோர் மகத்துவக் குமாரனோ இவர்
அரூபரூப சொரூபன் கேரூபின் வாகன தீபன்
வீரியப் பிரதாபன் சீனாவெற்பிலிருந்தவன்
கற்பனைத்தந்தவன் வான
மந்தைக் காட்டிலே மாட்டுக் கொட்டிலிலே
கந்தைத் துணியைப் பொதிந்த சூட்சி
நிந்தைப் பாவிகள் சொந்தக் கண் காட்சி
வேறே பேரல்ல சுரர் விண்ணவ ராருமல்ல
மாறில்லாத ஈறில்லாத
வல்லமைத் தேவனே புல்லிற் கிடக்கிறார்
சீயோனின் மாதேயினிச் செணந் தரியாதே
மாயமென்ன வுனக்குச் சொல்லவோ
வந்தவர் மணவாளனல்லவோ
ஆதாமின் குலமே யிதானாலும் புதுமை
வேதநாயகன் பாட்டுப் பார்த்தது
மேசியாவின் விளையாட்டுக் கேர்த்தது