அத்திமரம் துளிர்விடாமற்போனாலும்
அத்திமரம் துளிர்விடாமற் போனாலும்
திராட்சைச் செடி பழம் கொடாமற் போனாலும்
ஒலிவ மரம் பலனற்றுப் போனாலும்
நான் இயேசுவுக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன்
வயல்களிலே தானியமின்றிப் போனாலும்
மந்தையிலே முதலற்றுப் போனாலும்
தொளுவத்திலே மாடுகளின்றிப் போனாலும் – நான்
இயேசுவுக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன்
நதிகளிலே தண்ணீர் வற்றிப் போனாலும்
நாவறண்டு நான் மயங்கி வீழ்ந்தாலும்
உடலழிந்து உயிர்பிரிந்து போனாலும்
இயேசுவுக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன்