P

Pothum Pothum Intha

போதும் போதும் இந்த உலகத்தின்

போதும் போதும் இந்த உலகத்தின் துன்பம்
வாரும் வாரும் எங்கள் இயேசுவே வாரும்
கல்லான மனங்களெல்லாம் கனிய செய்யும்
பொல்லாத மனிதர்களை நீரே மாற்றும்

உலகத்தின் பாவமே நிறைந்து வழியுது
தீமைகள் நாளக்கு நாள்பெருகி வருகிறது
எங்கும் அநீதி சுடர் விட்டு எரிகிறது
எங்களின் தெய்வமே எங்களை காருமே

ஆத்தும பாரத்தை எனக்கு தந்தீர் நீர்
ஆத்தம ஆதாயம் நானும் செய்திட
அழிந்திடும் மாந்தரை உம்மிடம் சேத்திட
உன்னதர் இயேசுவே வல்லமை தாருமே

அழிந்திடும் மாந்தர்கள் வெளிச்சம் காணட்டும்
மரிக்கும் மாந்தர்கள் ஜீவனை அடையட்டும்
தூயரின் இரத்தமே சாபத்தை போக்கட்டும்
தூய்மையாய் வாழ்ந்திட பெலனை ஈந்திடும்