என்னைத் தொட்டு ஏழிசை
என்னைத் தொட்டு ஏழிசை மெட்டு
இறைவன் மீட்டுகிறார்
தன் மகிமையைக் காட்டுகிறார்
அமைதி தேடும் இதய வாசல் உவகையோடு பாடிடும்
மௌனம் என்னும் மொழியிலேயே நூறு ராகம் கூறிடும்
கண்ணுக்கு எட்டா பேரின்பம் நீயே என்நாளும் வற்றா அருட்கடலே
உணர்கிறேன் உன் பார்வையிலே
அற்புதங்கள் நிகழ்த்தும் உந்தன் அருட் கரங்கள் வேண்டுமே
கலவரங்கள் நிறைந்த இந்த அவனிதன்னை தொடட்டுமே
பகைவனுக்கு அன்பு, ஓர் இறைவனை நம்பு
நீ சொன்ன வாக்கு நிலைக்கட்டுமே அமைதி ஊற்றுப் பெருகட்டுமே