M

Manitha Manitha

மனிதா மனதா நிம்மதி இல்லையா

மனிதா மனிதா நிம்மதி இல்லையா
நிம்மதி தரும் இயேசு உன்னை
அழைக்கின்றார் வா வா

பணத்தைக் கொஞ்சம் சேர்த்து விட்டால்
அது நிம்மதி தருமா
ஓடி ஓடி பணத்தை சேர்த்தாலும்
நிம்மதி இல்லையே நிம்மதி இல்லையே

உலகத்தைக் கொஞ்சம் சுற்றி வந்தால்
அது நிம்மதி தருமா
வானத்தின் கீழே பூமிக்கு மேலே
எல்லாம் மாயையே எல்லாம் மாயையே.

நிம்மதி கிடைக்கும் இடத்தை நாங்க
உனக்கு சொல்லட்டுமா
இயேசு இயேசு என்றுச் சொன்னாலே
நிம்மதி கிடைக்குமே நிம்மதி கிடைக்குமே