T

Thaesamae Nee Payapadathae

தேசமே தேசமே நீ பயப்படாதே

தேசமே தேசமே நீ பயப்படாதே – உன்
தேவனில் களி கூர்ந்து மகிழ்ந்திடுவாய்
கர்த்தர் உந்தன் வாழ்விலே
பெரிய காரியம் செய்திடுவார்
கலங்காதே திகையாதே
கண்ணீர் சிந்தாதே

அல்லேலூயா ஆமென் அல்லேலூயா
அல்லேலூயா ஆமென் அல்லேலூயா

தீராத வியாதிகளைத் தீர்த்து வைப்பாரே எதிர்
பாராத ஆபாத்திலும் தப்புவிப்பாரே
பாவங்கள்இ சாபங்கள் போக்கிடுவாரே
பெரிய இரட்சிப்பை தந்திடுவாரே

சந்தோஷம் இல்லையென்று சோர்ந்து விடாதே
சத்துருவின் தொல்லைகளால் துவண்டுவிடாதே
சாத்தானைக் கண்டு நீயும் பயந்துவிடாதே
சத்திய தேவனுண்டு மறந்து விடாதே

அப்பா பிதாயென்று அழைத்திடுவாயே உன்
அருகினிலே அவர் வருவார் மகிழ்ந்திடுவாயே
என்ன வேண்டும் என்று இயேசு உன்னைக் கேட்பாரே
எதையும் கேட்க முடியாமல் திகைத்து நிற்பாயே