J

Jordanai Kadakkum

யோர்தானை கடக்கும் விசுவாசியே நீ

யோர்தானை கடக்கும் விசுவாசியே நீ
தேவனின் சத்தத்தைக் கேட்டாயோ?
அவருன்னை வருந்தி அழைக்கிறாரே
இரட்சிப்பார் உன்னை இந்நேரமிதில்

முழு இருதயத்தோடும் முழு ஆத்துமாவோடும்
நீயும் உன் பிள்ளைகளும் செவி கொடுத்தால்
உன் சத்தத்தைக் கேட்பார் இரங்குவார் உனக்கு
சேர்ப்பார் உன்னை அவர் மந்தையிலே

உன் சிறையிருப்பை நீக்கி உனக்கு இரங்கும்
உன் தேவனாகிய கர்த்தர் அவர்
கடையான திசைமட்டும் துரத்துண்டிருந்தாலும்
உன்னைக் கூட்டிச் சேர்த்திடுவார்

அவர் கற்பனைகள் பல கட்டளைகள்
முழு ஆத்துமாவோடும் இதயத்தோடும்
நீ செவி சாய்த்துக் கைக்கொண்டு மனந்திரும்பினால்
சந்தோஷமடைவார் என்றென்றுமே