K

Kadavul Undu

கடவுள் உண்டு தான்

கடவுள் உண்டு தான்
அதுவும் ஒன்று தான்
கற்பனையில் உருவாகும் கல்லும்
மண்ணும் கடவுளல்ல
மடமை என்று ஓர் மடத்தின்
மண்டபத்தின் மலை உச்சியில்
உடமையும் பொருள் கொடுத்து
முடியும் பண்டிகை கடவுளல்ல

கூழுக்கு வழியில்லா மக்கள்
விதி மட்கி மாளும் போது
ஆளுக்கொரு தெய்வம் என்று
நாளுக்கொரு சடங்குகள் ஏன்
உள்ளத்தின் அன்பாகி உலகத்தின்
ஒளியான எள்ளத்தும் களமில்லா
இயேசுவே கடவுள் என்போம்

பாவத்தை கண்ணீராக பருகுகின்ற
மாந்தர்களின் சாபத்தை தொலைப்பதற்கு
சாத்திரங்கள் என்ன செய்யும்
பாவத்தின் பலியாகி பரலோகம் வழியாகி
பாவத்தின் பலியாகி …. ஆ ….
சிலுவையில் சாபம் தீர்த்த
இயேசுவே கடவுள் என்போம்