K

Kanna Sutha Kanna

கண்ணா… சுத்தக்கண்ணா

கண்ணா… சுத்தக்கண்ணா…
தீமையைப் பார்க்காத சுத்தக்கண்ணா
தீமை செய்த மனிதனுக்கு
நன்மை செய்த கண்ணா
பாவத்தை வெறுக்கின்ற பரிசுத்தக்கண்ணா
பாவியை அணைக்கின்ற கருணை கண்ணா
கண்ணா… இயேசு ராஜா…

என்னிடம் பாவம் உண்டு என்று
யார் என்னை குறை கூற முடியுமென்றீர்
குறையேதுமில்லாத அவதாரம் நீரே
நிஷ்களங்க புருஷப் பிரஜாபதியே
குற்றமே இல்லாத நிர்மல நாதா கண்ணா

ஜாதி வெறியை ஒழிக்க வந்த
சமத்துவ கண்ணா – ஒற்றுமை
உருவாக்க வந்த சமாதானக் கண்ணா
நாக தோஷம் சனி தோஷம்
செவ்வாய் தோஷம் என்று
பயந்து பயந்து வாழ்வோருக்கு
விடுதலைத் தரும் கண்ணா
தோஷம் நீங்கி நாங்கள் வாழ
சிலுவையிலே உயிரைத் தந்த கண்ணா