ஒருவன் இயேசுவில் அன்பாயிருந்தால்
ஒருவன் இயேசுவில் அன்பாயிருந்தால்
இயேசுவின் வார்த்தைகளை கைக்கொள்கிறான்
இயேசுவில் அன்பாயிராதவன்
இயேசுவின் போதனையை புறக்கணிக்கிறான்
உயிருள்ள வார்த்தைகளை புறக்கணிக்கிறான்
இறைவனால் உண்டானவன் இறைவனின்
வார்த்தைக்கு அர்த்தமுள்ள போதனைக்கு
அன்பின் அறிவுரைக்கு செவிசாய்க்கிறான்
சத்தியத்தை அறிந்தவன்
விடுதலை அடைகிறான்
உண்மையை உணர்ந்தவன்
துணிவோடு வாழ்கிறான்
வேதமில்லையேல் வெற்றியில்லையே
இயேசுவின் போதனை தான்
மோட்சம் செல்லும் பாதையாம்
தெய்வத்தின் வார்த்தையை மீறுகின்ற
பரம்பரை நம்பிக்கைகள் மூட மரபுகளை
இயேசு கிறிஸ்து வெறுக்கின்றாரே
கடவுளின் மனதினை புரிந்திடுவோம்
கடவுளின் விருப்பம் செய்திடுவோம்
கடவுளை தள்ளி அவர் வார்த்தையை மறுத்தால்
அந்த வார்த்தையையே நாம்மை நியாயம் தீர்க்கும்
மனிதனின் வார்த்தைக்கு கீழ்படிவதைவிட
கடவுளின் வார்த்தைக்கு
முக்கியத்துவம் கொடுத்து
கீழ்ப்படிந்து நடக்க கடவுள் சொன்னாரே
திருச்சபை போதகர் சொல்லித் தந்ததை
மறைநூல் வாசித்து ஆராய்வோம்
உண்மையை உணருவோம்
அறிந்தபின் திருந்துவோம்
உண்மை ஒருநாள் ஜெயிப்பது நிச்சயம்