P

Paareer Gethsamanae

பாரீர் கெத்சமனே

பாரீர் கெத்சமனே
பூங்காவில் என் நேசரையே
பாவி எனக்காய் வேண்டுதல் செய்திடும்
சத்தம் தொனித்திடுதே

தேகமெல்லாம் வருந்தி
சோகமடைந்தவராய்
தேவாதி தேவன் ஏகசுதன்
படும் பாடு எனக்காகவே

அப்பா என் பாத்திரமே
நீக்கும் நின் சித்தமானால்
எப்படியாயினும் சித்தம் செய்ய என்னை
தத்தம் செய்வேன் என்றாரே

ரத்தத்தின் வேர்வையாலே
மெத்தவும் நனைந்ததே
இம்மானுவேல் உள்ளம் உருகியே
வேண்டுதல் செய்தாரே

மும்முறை தரைமீது
தாங்கொணா வேதனையால்
உன்னதன் தாமே வீழ்ந்து ஜெபித்தாரே
பாதகன் மீட்புறவே