T

Thanimaiyil Ummai

தனிமையில் உம்மை ஆராதிக்கின்றேன் தனிமையில் உம்மை ஆராதிக்கின்றேன் தன்னந்தனியாக ஆராதிக்கின்றேன் எல்லோரும் இருந்த போதும் ஆராதித்தேனே யாரும் இல்லா வேளையிலும் ஆராதிப்பேனே அந்நாளில் தோழரோடு ஆராதித்தேனே இந்நாளில் தனிமரமாய் ஆராதிக்கின்றேன் சந்தோஷமாய் இருந்தபோது ஆராதித்தேனே சுக்கு நூறாய் உடைந்தபோதும் ஆராதிப்பேனே நிறைவாக வாழ்ந்தபோது ஆராதித்தேனே நிலைமாறி விழுந்தபோதும் ஆராதிப்பேனே சுகத்தோடு வாழ்ந்தபோது ஆராதித்தேனே சுகவீனமானபோதும் ஆராதிப்பேனே நல்லவரே உம்மை ஆராதிக்கின்றேன் நன்றி சொல்லி உம்மை ஆராதிக்கின்றேன் ஆண்டவரே உம்மை ஆராதிக்கின்றேன் ஆறுதலே உம்மை ஆராதிக்கின்றேன் உன்னதரே உம்மை…

T

Thalai Saaikum

தலை சாய்க்கும் கல் நீரய்யா தலை சாய்க்கும் கல் நீரய்யா மூலைக்கல் நீரய்யா ஏல் பெத்தேல் இது வானத்தின் வாசல் என் இயேசையா ஆசீர்வாதத்தின் வாசல் மேற்கு கிழக்கு வடக்கு தெற்கு பரம்புவாய் என்றீரே பூமியின் தூளைப்போல் உன் சந்ததி பெருகும் என்று வாக்குரைத்தீரே சொன்னதை செய்யுமளவும் என்னை கைவிடவே மாட்டீர் – எனக்கு பூமியின் வம்சங்கள் உனக்குள் உன் சந்ததிக்குள் ஆசீர்வதிக்கப்படும் என்று ஆசீர்வாத வாய்க்காலாக என்னை மாற்றினீரே சொன்னதை செய்யுமளவும் என்னை கைவிடவே மாட்டீர்…

T

Thooyathi Thooyavarae

தூயாதி தூயவரே உமது புகழை தூயாதி தூயவரே உமது புகழை நான் பாடுவேன் பாரில் எனக்கு வேறென்ன வேண்டும் உயிருள்ள வரை நின் புகழ் பாட வேண்டும் – தூயாதி சீடரின் கால்களைக் கழுவினவர் செந்நீரால் என்னுள்ளம் கழுவிடுமே! பாரோரின் நோய்களை நீக்கினவர் பாவி என் பாவ நோய் நீக்கினீரே! துயரங்கள் பாரினில் அடைந்தவரே துன்பங்கள் தாங்கிட பெலன் தாருமே! பரலோகில் இடமுண்டு என்றவரே பரிவாக எனைச் சேர்க்க வேகம் வாருமே நோய்களை அகற்றிடும் வைத்தியராய் தெய்வீக…

T

Thai Pola Thetri

தாய்போல தேற்றி தந்தை போல தாய்போல தேற்றி தந்தை போல ஆற்றி தோள்மீது சுமந்திடும் என் இயேசைய்யா உம்மை போல புரிந்து கொள்ள யாருமில்லையே உம்மை போல அரவணைக்க யாருமில்லையே நீர் போதும் என் வாழ்விலே – இயேசைய்யா மலைபோல துன்பம் எனை சூழும் போது அதை பனிபோல உருகிட செய்பவரே கண்மணி போல என்னை காப்பவரே உள்ளங்கையில் பொறித்தென்னை நினைப்பவரே நீர் போதும் என் வாழ்விலே – இயேசைய்யா பெலவீன நேரம் என் கிருபை உனக்கு…

T

Thaesamae Nee Payapadathae

தேசமே தேசமே நீ பயப்படாதே தேசமே தேசமே நீ பயப்படாதே – உன் தேவனில் களி கூர்ந்து மகிழ்ந்திடுவாய் கர்த்தர் உந்தன் வாழ்விலே பெரிய காரியம் செய்திடுவார் கலங்காதே திகையாதே கண்ணீர் சிந்தாதே அல்லேலூயா ஆமென் அல்லேலூயா அல்லேலூயா ஆமென் அல்லேலூயா தீராத வியாதிகளைத் தீர்த்து வைப்பாரே எதிர் பாராத ஆபாத்திலும் தப்புவிப்பாரே பாவங்கள்இ சாபங்கள் போக்கிடுவாரே பெரிய இரட்சிப்பை தந்திடுவாரே சந்தோஷம் இல்லையென்று சோர்ந்து விடாதே சத்துருவின் தொல்லைகளால் துவண்டுவிடாதே சாத்தானைக் கண்டு நீயும் பயந்துவிடாதே…

T

Thunai Enrum Yesu Deva

 துணை என்றும் இயேசு தேவா துணை என்றும் இயேசு தேவா உமை நம்பினேன் எம்மைக்காரும் தேவ மைந்தா உமைச் சாருவேன் இருள் யாவும் நீக்கி எம்மில் அருள் யாவும் தந்தீர் தேவா கனிவாக வந்தீரே துணையாக நின்றீரே தேவ தேவன் இயேசுவே அன்பு போதுமே எனக்காக யாவும் செய்யும் பலமுள்ள தேவன் நீரே விளக்கினை ஏற்றுவீர் அபிஷேகம் பண்ணுவீர் எந்தன் கொம்பு உயர்ந்திடும் நம்பும் தேவனே அலை போல பாயும் துன்பம் கடல் போல சீறும் காற்றோ இரையாதே என்றீரே…

T

Thanimaiyai Azhuginrayo

தனிமையாய் அழுகின்றாயோ தனிமையாய் அழுகின்றாயோ அழைத்தவர் நானல்லவோ கலங்கிடாதே மகனே ‍எந்தன் தோளில் சுமப்பேன் என் மகனே கலங்கிடாதே என் மகளே எந்தன் நெஞ்சில் அனைப்பேன் என் மகளே தனிமையாய் அழுகின்றாயோ இன்றுவரை உந்தன் வாழ்வில் என்றேனும் கை விட்டேனோ வென்று வந்தவை எல்லாம் என்னாலே என்று உணர்வாய் பின்வாழ்வைத் திரும்பிப் பார்த்தால் என் அன்பை நன்கு அறிவாய் எவைகள் உன் தேவையென்று என் ஞானம் அறிந்திடாதோ உந்தன் ஏக்கங்கள் அறிவேன் தேவை உணர்ந்து நான் தருவேன்…

T

Thuthippom Allelujah Paadi

துதிப்போம் அல்லேலூயா பாடி துதிப்போம் அல்லேலூயா பாடி மகிழ்வோம் மகிபனைப் போற்றி மகிமை தேவ மகிமை – தேவ தேவனுக்கே மகிமை – அல்லேலூயா தேவன் நம்மை வந்தடையச் செய்தார் தம்மையென்றும் அதற்காகத் தந்தார் அற்புதங்கள் செய்யும் சர்வ வல்ல தேவன் அடைக்கலம் கொடுத்திடுவார் அஞ்சிடேனே இருளிலே என்றும் நடமாடும் கொள்ளை நோயைக் கண்டும் பயங்கரத்திற்கும் பறக்கும் அம்பிற்கும் பயந்திடேன் ஜெயித்திடுவேன் தேவன் எந்தன் அடைக்கலமாமே ஒருபோதும் பொல்லாப்பு வராதே சர்வ வல்ல தேவன் தாபரமாய் நின்றே…

T

Thasanagiya Yakobe

தாசனாகிய யாக்கோபே தாசனாகிய யாக்கோபே பயப்படாதே திகையாதே உனக்கு முன்பாக நான் செல்வேன் வழிகள் செவ்வையாக்குவேன் இதுவரையிலும் காத்திட்டேன் இனியும் காத்திடுவேன் மறைவிலிருக்கும் பொக்கிஷங்களை உனக்கு தந்திடுவேன் வலக்கரத்தினால் தாங்கிடுவேன் பெலனை கொடுத்திடுவேன் வறண்ட நிலத்தின் மேல் ஆறுகளை ஓடச்செய்வேன் உன் மேல் ஆவியும் ஆசீர்வாதமும் ஊற்றிடுவேன் தாயைப் போல தேற்றிடுவேன் தந்தை போல் அணைத்திடுவேன் கால்கள் கல்லில் இடறாமல் கருத்தாய் காத்திடுவேன் நினைத்திடாத அளவிற்கு நான் உன்னை உயர்த்திடுவேன் ஆறுகளை நீ கடக்கையிலே உன்னோடு நான்…

T

Thirukarathal Thaangi Ennai

திருக்கரத்தால் தாங்கி என்னை திருக்கரத்தால் தாங்கி என்னை திருச்சித்தம் போல் நடத்திடுமே குயவன் கையில் களிமண் நான் அனுதினமும் நீர் வனைந்திடுமே உம் வசனம் தியானிக்கையில் இதயமதில் ஆறுதலே காரிருளில் நடக்கையிலே தீபமாக வழி நடத்தும் ஆழ்கடலில் அலைகளினால் அசையும்போது என் படகில் ஆத்ம நண்பர் இயேசு உண்டே சேர்ந்திடுவேன் அவர் சமூகம் அவர் நமக்காய் ஜீவன் தந்து அளித்தனரே இந்த மீட்பு கண்களினால் காண்கிறேனே இன்ப கானான் தேசமதை