P

Paraloga Santhosam

பரலோக சந்தோஷம் பாரினில் பரலோக சந்தோஷம் பாரினில் வந்து என்னைப் பரவசப்படுத்துகிறதே பரமபிதா நீர் எந்தன் தந்தை பாவி நான் உந்தன் பிள்ளை ஆனேன் புத்திர சுவீகார ஆவியினால் நீர் என்னைப் பிரித்தெடுத்தீர் புரியாத உணர்வாலே எனைத் தேற்றுவீர் அது உன்னத பெலன் அல்லவா என் பிரிய இயேசு என் இனிய நேசர் என்னோடு இருப்பார் என்றும் ஜீவ ஒளியாக எந்தன் இருள் வாழ்வில் வந்தார் தெய்வீகமான அன்பே பரலோகம் எனக்குள் உருவாகுதே இங்கே அந்தப் பரமனைக்…

P

Payangara Parakiramam

பயங்கர பராக்கிரமம் செய்யும் பயங்கர பராக்கிரமம் செய்யும் தேவன் இருப்பதினால் அஞ்சிடேன் என்றுமே ஜெயமே நான் அடைந்திடுவேன் அவர் மா அன்பினால் என்னை மாற்றி தினம் அதிசயம் காட்டி இணங்கச் செய்தார் ஜெயித்திடுவேன் வீழ்த்திடுவேன் தேவாவி என் மீது தங்குவார் அவர் நல்லவரே அவர் வல்லவரே சோதித்து அறியும் கர்த்தரிவர் தேர்ச்சி என்றும் உண்டாகும் காரியம் அவர் மீது சாட்டினேன் அவர் நான் நம்பிடும் எந்தன் தேவனாவார் உதவிகள் அவரால் கிடைத்திடுமே உண்மையினை காத்திடுவேன் எனக்காக யாவையும்செய்குவார்…

P

Pentecostae Naazhlil

பெந்தெகொஸ்தே நாளில் வந்தது பெந்தெகொஸ்தே நாளில் வந்தது போல்இறங்கி வாரும் பரிசுத்தாவியேஉமது சமூகம் சந்தோஷம் மகிழ்ச்சிஅக்கினியால் அபிஷேகியும் – எங்களை அக்கினி மயமான நாவுகள் இறங்கிபலத்த காற்று அடிக்கும் இடி முழக்கம்போலேஅஸ்திபாரம் அசைய வாரும் ஆவியேஎன் தேவாலயம் நிரம்பி வழியவே ஒரு மன ஐக்கிய ஆவியை ஊற்றும்ஒரே இருதயமாக மாறவேவல்லமையோடு வந்தமருமே – தேவஅன்பினாலே எம்மை நிரப்புமே பரிசுத்த பிரசன்னம் அசைவாடட்டும்பரலோக மகிமை எம் கண்கள் காணட்டும்ஆத்துமாக்களை வந்து ஆற்றித் தேற்றுமேஆனந்தப் பரவசத்தால்

P

Paareer Gethsamanae

பாரீர் கெத்சமனே பாரீர் கெத்சமனே பூங்காவில் என் நேசரையே பாவி எனக்காய் வேண்டுதல் செய்திடும் சத்தம் தொனித்திடுதே தேகமெல்லாம் வருந்தி சோகமடைந்தவராய் தேவாதி தேவன் ஏகசுதன் படும் பாடு எனக்காகவே அப்பா என் பாத்திரமே நீக்கும் நின் சித்தமானால் எப்படியாயினும் சித்தம் செய்ய என்னை தத்தம் செய்வேன் என்றாரே ரத்தத்தின் வேர்வையாலே மெத்தவும் நனைந்ததே இம்மானுவேல் உள்ளம் உருகியே வேண்டுதல் செய்தாரே மும்முறை தரைமீது தாங்கொணா வேதனையால் உன்னதன் தாமே வீழ்ந்து ஜெபித்தாரே பாதகன் மீட்புறவே

P

Puthiya Paadal Paadi

புதிய பாடல் பாடி பாடி இயேசு புதிய பாடல் பாடி பாடி இயேசு ராஜாவைக் கொண்டாடுவோம் புகழ்ந்து பாடல் பாடி பாடி இயேசு ராஜாவைக் கொண்டாடுவோம் கழுவினார் இரத்தத்தாலே சுகம் தந்தார் காயத்தாலே தேற்றினார் வசனத்தாலே திடன்தந்தார் ஆவியாலே – எனக்கு உறுதியாய் பற்றிக் கொண்டோம் உம்மையே நம்பி உள்ளோம் பூரண சமாதானம் புவிதனில் தருபவரே – தினமும் அதிசயமானவரே ஆலோசனைக் கர்த்தரே வல்லமை உள்ள தேவா வரங்களின் மன்னவனே – தேவா கூப்பிட்டேன் பதில் வந்தது…

P

Payapadamaaten Naan

பயப்படமாட்டேன் நான் பயப்படமாட்டேன் பயப்படமாட்டேன் நான் பயப்படமாட்டேன் இயேசு என்னோடு இருப்பதனால் ஏலேலோ ஐலசா ஏலேலோ ஐலசா உதவி வருகிறார் பெலன் தருகிறார் ஒவ்வொரு நாளும் கூட வருகிறார் காற்று வீசட்டும் கடல் பொங்கட்டும் எனது நங்கூரம் இயேசு இருக்கிறார் வலைகள் வீசுவோம் மீன்களைப் பிடிப்போம் ஆத்துமாக்களை அறுவடை செய்வோம் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையும் செய்ய பெலன் உண்டு பரம அழைத்தலின் பந்தய பொருளுக்காய் இலக்கை நோக்கி நாம் படகைஓட்டுவோம் உலகில் இருக்கிற அலகையை விட என்னில்…

P

Paadum Paadal Yesuvukkaga

பாடும் பாடல் இயேசுவுக்காக பாடும் பாடல் இயேசுவுக்காக பாடுவேன் நான் எந்த நாளுமே என் ராஜா வண்ண ரோஜா பள்ளத்தாக்கின் லீலி அவரே அழகென்றால் அவர் போல யார் தான் உண்டு இந்த லோகத்தில் வண்ண மேனியோனே எண்ணிப் பாடிடவே என் உள்ளம் மகிழ்வாகுதே அன்பினிலே என் நேசர்க்கே என்றென்றுமே இணையில்லையே என்னை மீட்டிடவே தன் ஜீவன் தந்தார் என் நேசர் அன்பில் மகிழ்வேன் தெய்வம் என்றால் இயேசுதானே சாவை வென்று உயிர்த்தெழுந்தாரே என் பொன் நேசரின்…

P

Podhum Podhum Sodhanaigal

போதும் போதும் சோதனைகள் போதும் போதும் சோதனைகள் போதுமே வேண்டும் வேண்டும் ஆறுதலும் வேண்டுமே தயாபரனே… தயாபரனே இரங்கி வாருமே தயாபரனே தப்பென்று தெரிந்தும் தப்பையே செய்கிறேன் தப்பிக்க வழியில்லையா தப்பே செய்யாத என் இயேசு தேவா தப்பிக்க வழி செய்வீரா கண்களின் இச்சைகொண்டேன் மாமிசத்தில் இச்சைக்கொண்டேன் ஜீவனில் பெருமைகொண்டேன் எப்படி இவைகளை மேற்கொள்வேனென்று உம்மையே நோக்கி நின்றேன் பாவத்தை செய்யும்போது பாவம் என்னை சூழும்போது கர்த்தரை நான் மறக்கிறேன் பாவத்தின் பலனை நான் அடையும்போதோ கர்த்தரை…

P

Pasuthol Porthiya Puliyaa

பசுத்தோல் போர்த்திய புலியா நீ பசுத்தோல் போர்த்திய புலியா நீ பயிரை மேயும் வேலியா வெளியில் ஒரு குணம் கோயிலில் ஒரு குணம் இதுதான் உந்தன் வாழ்க்கையா அனலும் இல்லாமல், குளிரும் இல்லாமல் வாழும் வாழ்க்கையில் பயனில்லை தேவன்மேல் அன்பும் பிறன்மேல் அன்பும் வாழ்க்கையில் இருந்தால் பயமில்லை குடியை தேடி புகையை ஊதி வாழ்நாள் முழுவதும் களியாட்டம் ஆலயத்தில் மட்டும் மகா பரிசுத்தம் பயங்கரமான பாவ குற்றம் – இது வாயின் வஞ்சகம் வீண் வாக்குவாதம் மனதில்…

P

Paralogil Vaazhum Parameswara

பரலோகத்தில் வாழும் பரமேஷ்வரா பரலோகத்தில் வாழும் பரமேஷ்வரா பரிசுத்தமாய் வாழும் பவித்ரேஷ்வரா உலகிற்கு ஒளியான ஜோதீஷ்வரா இயேசு ராஜேஷ்வரா மன சாந்தீஷ்வரா பாவத்தை சுட்டெரிக்கும் அக்னீஷ்வரா நோய் நீக்கி பேயோட்டும் வைத்தீஷ்வரா பாவிக்கு மறுவாழ்வாம் ரக்ஷேஷ்வரா காருண்யேஷ்வரா மகா ஈஷ்வரா அனைத்துக்கும் மேலான சர்வேஷ்வரா அகிலாண்டம் படைத்தாலும் பிரம்மேஷ்வரா மரித்த பின்பு உயிர்த்தெழுந்த ஜீவேஷ்வரா முக்தீஷ்வரா சர்வ சக்தீஷ்வரா