E

En Yesuve Naan Endrum Unthan Sontham

என் இயேசுவே நான் என்றும் உந்தன் சொந்தம் என் இயேசுவே நான் என்றும் உந்தன் சொந்தம் என் ராஜனே அனுதினமும் வழிநடத்தும் உளையான சேற்றின் மேல் தூக்கியே நிறுத்தினீரே உந்தனை நான் மறவேன் உந்தனைப் போற்றிடுவேன் அலைந்தோடும் கடலதனை அடக்கியே அமர்த்தினீரே வார்த்தையின் வல்லமையை என்றுமே காணச்செய்யும் தாயினும் அன்பு வைத்தே தாங்கியே காப்பவரே ஜீவிய காலமெல்லாம் உந்தனைப் பின்செல்லுவேன் அக்கினி சூளையிலே நின்ற எம் மெய் தேவனே விசுவாசம் திடமனதும் என்றென்றும் தந்தருளும் ஆகாரின் அழுகுரலை…

M

Magimai Koduththa Mannavarae

மகிமை கொடுத்த மன்னவரே ஸ்தோத்திரம் மகிமை கொடுத்த மன்னவரே ஸ்தோத்திரம் மனமகிழ்ச்சி தந்த மணாளனே ஸ்தோத்திரம் மகிமை கொடுத்த மன்னவரே ஸ்தோத்திரம் காக்கின்ற இறைவா ஸ்தோத்திரம் கருணை வைத்ததால் துதிக்கின்றேன் – எந்நாளும் துதிக்கின்றேன் எந்நாளும் நீதியின் தேவனே ஸ்தோத்திரம் நிர்மல ராஜனே ஸ்தோத்திரம் நீதிமான்களாய் எங்களை மாற்ற ஜீவன் கொடுத்தவரே ஸ்தோத்திரம் வல்லமை உள்ளவரே ஸ்தோத்திரம் வழுவாமல் காப்பவரே ஸ்தோத்திரம் வாதைக்கும் துன்பத்திற்கும் விலக்கி மீட்ட அன்பான தேவனே ஸ்தோத்திரம் பரலோக தேவனே ஸ்தோத்திரம் பரிசுத்த…

V

Vinnaga Thanthaiye Umathu Naamam

விண்ணக தந்தையே உமது நாமம் விண்ணக தந்தையே உமது நாமம் அர்ச்சிக்க படுவதாக! உமது ராச்சியம் வருக! உமது சித்தம் விண்ணகத்தில் செய்யப்படுவதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக! எங்கள் அனுதின உணவை எங்களுக்கு இன்று அளித்தருளும் எங்களுக்கு தீமை செய்பவர்களை நாங்கள் பொறுப்பது போல எங்கள் பாவங்களை பொறுத்தருளும் எங்களை சோதனையில் விழவிடாதேயும் தீமையிலிருந்து எங்களை ரச்சித்தருளும் விண்ணக தந்தையே உமது நாமம் அர்ச்சிக்க படுவதாக!

S

Sinnanchsiriya Padagu Onru

சின்னஞ் சிறிய படகு ஒன்று சின்னஞ் சிறிய படகு ஒன்று நீந்திக் கடலில் சென்றதம்மா இயேசுவை சீடரை சுமந்து கொண்டு இனிதே அசைந்து விரைந்ததம்மா பொங்கி அலைகள் எழுந்ததம்மா அங்கும், இங்கும் அசைந்ததம்மா புயலைக் கண்டு சீடரெல்லாம் பயந்து, கலங்கி வெருண்டாரம்மா இரைச்சல் கேட்டு எழுந்த இயேசு இரையும் கடலை அதட்டிடவே பொங்கின கடலும் ஓய்ந்ததம்மா எங்கும் அமைதி சூழ்ந்ததம்மா வாழ்க்கை என்னும் படகில் இயேசு என்றும் என்னோடிருப்பாரம்மா துன்பங்கள் ஏதும் வந்தாலும் பயமே எனக்கு இல்லையம்மா

S

Sthothiramae Sthothiramae Appa Appa

ஸ்தோத்திரமே ஸ்தோத்திரமே அப்பா அப்பா ஸ்தோத்திரமே ஸ்தோத்திரமே அப்பா அப்பா உம் கிருபை எனக்கு போது அப்பா அப்பா வல்லவரே நல்லவரே வல்லவரே நல்லவரே கர்த்தரே என் கன்மலையும் கோட்டையுமானார் ரட்சகரும் தேவனுமானார் – நான் நம்பின என் துருகமும் கேடகமானார் ரட்சணிய கொம்புமானார் தேவரீர் என் இருளையெல்லாம் வெளிச்சமாக்கினீர் எனது விளக்கை ஏற்றி வைத்தீர் – ஒரு சேனைக்குள்ளே பாயச்செய்து போரிடச் செய்தீர் மதிலையெல்லாம் தாண்டிடச் செய்தீர் உம்முடைய வலக்கரத்தால் என்னை தாங்கினீர் – உம்…

E

Ennaiyae Arpanithean Yesuvae

என்னையே அர்பணித்தேன் என்னையே அர்பணித்தேன் இயேசுவே உம் சேவைக்கே ஆவி ஆத்ம சரீரத்தில் ஜெயம் தந்தாட்கொள்வீர் லோக சிற்றின்பம் வேந்தனே தியாகத்தின் பாதையிலே பூலோக நேசம் வேண்டாமே போதும் உம் அன்பென்றுமே பாரில் பாடுங்கள் வந்தாலும் நோய் பிணி வருத்தினாலும் வழுவாமல் தினம் சென்றிட வல்லமை ஈந்திடுவீர் ஜீவ காலம் முழுவதும் தேவனின் சேவை செய்வேன் என் சித்தம் யாவும் நீக்கியே உம் சித்தம் செய்திடுவீர் பூவில் உம் சுவிஷேசத்தை பூரணமாய் உரைப்பேன் கால் மிதிக்கும் இடம்…

E

En Kirubai Unakku Pothum

என் கிருபை உனக்குப் போதும் என் கிருபை உனக்குப் போதும் இந்த மண்ணில் வேறு என்ன வேண்டும் சொல் ஒருபோதும் உன்னை மறவேன் உன் நிழலைப்போல உன்னைத் தொடர்வேன் நான் அமைதித்தோட்டமாக நானும் உலகை உனக்குக் கொடுத்தேன் ஜாதிப் பூக்கள் வளர்த்தாய் நீயும் யுத்தம் நாளும் தொடுத்தாய் கண்ணீருக்கும் செந்நீருக்கும் உன்னை நீ அடகுவைத்தாய் சிலுவையின் வழி மீட்பு என்றே சிந்தையில் நீ ஏற்கவில்லை விழுதுகள் என்று நான் நினைத்த மனிதர்கள் என்னைச் சார்ந்ததில்லை என்ன நடந்தாலும்…

N

Neer Indri Vazhvethu Iraiva

நீரின்றி வாழ்வேது இறைவா நீரின்றி வாழ்வேது இறைவா உம் நினைவின்றி மகிழ்வேது தேவா உலகத்தில் நூறாண்டு நான் வாழ்ந்த போதும் உம் இல்லத்தில் வாழும் ஒரு நாளே போதும் பல கோடி வார்த்தைகள் நான் கேட்ட போதும் இயேசுவே நீர் பேசும் ஒருவார்த்தை போதும் ஓராயிரம் ஜீவன் உயிர்வாழுவேன் உம் வார்த்தையில் உண்டு அற்புதமே கல்லுக்குள் தேரையை வைத்தவர் நீர் அதற்குள்ளும் ஜீவனை தந்தவர் நீர் உமையன்றி அணுவேதும் அசையாதையா உம் துணையின்றி உயிர்வாழ முடியாதையா எத்தனை…

D

Devan Varukinraar Vegam

தேவன் வருகின்றார் வேகம் தேவன் வருகின்றார் வேகம் இறங்கி தேவ பர்வதம் தம் பாதம் நிறுத்தி பூமிதனை நியாயம் தீர்த்திடுவார் பூலோக மக்களும் கண்டிடுவார் இயேசு கிறிஸ்து வருகின்றார் இந்தக் கடைசி காலத்திலே கர்த்தரைக் குத்தின கண்கள் யாவும் கண்டு புலம்பிடுதே ஏழாம் தலைமுறை ஏனோக் குரைத்த எல்லாம் நிறைவேறும் காலம் நெருங்க யேசு கிறிஸ்துவின் சத்தியத்தை ஏற்க மறுத்தவர் நடுங்குவார் தம்மை விரோதித்த அவபக்தரை செம்மை வழிகளில் செல்லாதவரை ஆண்டவர் ஆயிரம் பக்தரோடே அந்நாளிலே நியாயம்…

E

Egypthilirindhu Kaanaanukku

எகிப்திலிருந்து கானானுக்கு எகிப்திலிருந்து கானானுக்கு கூட்டிச் சென்றீரே – உமக்கு கோடி நன்றி ஐயா அல்லேலூயா அல்லேலூயா கடலும் பிரிந்தது மனமும் மகிழ்ந்தது கர்த்தரை என்றும் மனது ஸ்தோத்தரித்தது அல்லேலூயா அல்லேலூயா பாறையினின்று தண்ணீர் சுரந்தது தாகம் தீர்த்தது கர்த்தரை மனமும் போற்றியது அல்லேலூயா அல்லேலூயா வெண்கல சர்ப்பம் ஆனாரே நமக்காய் உயிர் கொடுத்தாரே அவரை உயர்த்திடுவோமே அல்லேலூயா அல்லேலூயா யோர்தானை கடந்தோம் எரிகோவை சூழ்ந்தோம் ஜெயங்கொடுத்தாரே அவரை துதித்திடுவோமே அல்லேலூயா அல்லேலூயா