P

Paraloga Santhosam

பரலோக சந்தோஷம் பாரினில் பரலோக சந்தோஷம் பாரினில் வந்து என்னைப் பரவசப்படுத்துகிறதே பரமபிதா நீர் எந்தன் தந்தை பாவி நான் உந்தன் பிள்ளை ஆனேன் புத்திர சுவீகார ஆவியினால் நீர் என்னைப் பிரித்தெடுத்தீர் புரியாத உணர்வாலே எனைத் தேற்றுவீர் அது உன்னத பெலன் அல்லவா என் பிரிய இயேசு என் இனிய நேசர் என்னோடு இருப்பார் என்றும் ஜீவ ஒளியாக எந்தன் இருள் வாழ்வில் வந்தார் தெய்வீகமான அன்பே பரலோகம் எனக்குள் உருவாகுதே இங்கே அந்தப் பரமனைக்…

T

Thaesamae Nee Payapadathae

தேசமே தேசமே நீ பயப்படாதே தேசமே தேசமே நீ பயப்படாதே – உன் தேவனில் களி கூர்ந்து மகிழ்ந்திடுவாய் கர்த்தர் உந்தன் வாழ்விலே பெரிய காரியம் செய்திடுவார் கலங்காதே திகையாதே கண்ணீர் சிந்தாதே அல்லேலூயா ஆமென் அல்லேலூயா அல்லேலூயா ஆமென் அல்லேலூயா தீராத வியாதிகளைத் தீர்த்து வைப்பாரே எதிர் பாராத ஆபாத்திலும் தப்புவிப்பாரே பாவங்கள்இ சாபங்கள் போக்கிடுவாரே பெரிய இரட்சிப்பை தந்திடுவாரே சந்தோஷம் இல்லையென்று சோர்ந்து விடாதே சத்துருவின் தொல்லைகளால் துவண்டுவிடாதே சாத்தானைக் கண்டு நீயும் பயந்துவிடாதே…

E

Ennai Thodhu

என்னைத் தொட்டு ஏழிசை என்னைத் தொட்டு ஏழிசை மெட்டு இறைவன் மீட்டுகிறார் தன் மகிமையைக் காட்டுகிறார் அமைதி தேடும் இதய வாசல் உவகையோடு பாடிடும் மௌனம் என்னும் மொழியிலேயே நூறு ராகம் கூறிடும் கண்ணுக்கு எட்டா பேரின்பம் நீயே என்நாளும் வற்றா அருட்கடலே உணர்கிறேன் உன் பார்வையிலே அற்புதங்கள் நிகழ்த்தும் உந்தன் அருட் கரங்கள் வேண்டுமே கலவரங்கள் நிறைந்த இந்த அவனிதன்னை தொடட்டுமே பகைவனுக்கு அன்பு, ஓர் இறைவனை நம்பு நீ சொன்ன வாக்கு நிலைக்கட்டுமே அமைதி…

M

Manitha Manitha

மனிதா மனதா நிம்மதி இல்லையா மனிதா மனிதா நிம்மதி இல்லையா நிம்மதி தரும் இயேசு உன்னை அழைக்கின்றார் வா வா பணத்தைக் கொஞ்சம் சேர்த்து விட்டால் அது நிம்மதி தருமா ஓடி ஓடி பணத்தை சேர்த்தாலும் நிம்மதி இல்லையே நிம்மதி இல்லையே உலகத்தைக் கொஞ்சம் சுற்றி வந்தால் அது நிம்மதி தருமா வானத்தின் கீழே பூமிக்கு மேலே எல்லாம் மாயையே எல்லாம் மாயையே. நிம்மதி கிடைக்கும் இடத்தை நாங்க உனக்கு சொல்லட்டுமா இயேசு இயேசு என்றுச் சொன்னாலே…

O

Oruvan Yesuvil Anbaiyirunthaal

ஒருவன் இயேசுவில் அன்பாயிருந்தால் ஒருவன் இயேசுவில் அன்பாயிருந்தால் இயேசுவின் வார்த்தைகளை கைக்கொள்கிறான் இயேசுவில் அன்பாயிராதவன் இயேசுவின் போதனையை புறக்கணிக்கிறான் உயிருள்ள வார்த்தைகளை புறக்கணிக்கிறான் இறைவனால் உண்டானவன் இறைவனின் வார்த்தைக்கு அர்த்தமுள்ள போதனைக்கு அன்பின் அறிவுரைக்கு செவிசாய்க்கிறான் சத்தியத்தை அறிந்தவன் விடுதலை அடைகிறான் உண்மையை உணர்ந்தவன் துணிவோடு வாழ்கிறான் வேதமில்லையேல் வெற்றியில்லையே இயேசுவின் போதனை தான் மோட்சம் செல்லும் பாதையாம் தெய்வத்தின் வார்த்தையை மீறுகின்ற பரம்பரை நம்பிக்கைகள் மூட மரபுகளை இயேசு கிறிஸ்து வெறுக்கின்றாரே கடவுளின் மனதினை புரிந்திடுவோம்…

E

En Devane Ennai Thodum

என் தேவனே என்னை தொடும் என் தேவனே என்னை தொடும் கைவிடாமல் காத்திடும் நன்மையால் நிரப்பிடும் மாசற்ற மனிதனாய் மாறிடவே என்னை தொட்டிடும் அன்பான தெய்வ மகனே சாட்சியாய் பகர்வேன் பாட்டாக படிப்பேன் நீர் செய்த நன்மைகளை நாள்தோறும் நினைப்பேன் சந்தோஷமும் சமாதானமும் தொட்டாலே உண்டாகுமே தொட்டாலே போதும் துன்பங்கள் போகும் விண்ணாட்டு மைந்தனே இறங்கி வாரும் சிட்டாக பறக்க சாபங்கள் நீங்க சிலுவை நாதனே சீக்கிரம் வாருமே ஆறுதலும் தேறுதலும் தொட்டாலே உண்டாகுமே

K

Kartharai Thuthuippen En

கர்த்தரை துதிப்பேன் என் கர்த்தரை துதிப்பேன் என் தேவனை ஆராதிப்பேன் யூத கோத்திரனை துதிப்பேன் இம்மானுவேலரை துதிப்பேன் ஏசுவே உம்மை நான் துதிப்பேன் பரிசுத்தரே உம்மை துதிப்பேன் உந்தன் பெலனாக துதிப்பேன் என் கீதமே உம்மை துதிப்பேன் நல்லவரே உம்மை துதிப்பேன் நாள் முழுதும் உம்மை துதிப்பேன்

E

En Yesu Raja Sthothiram

என் இயேசு ராஜா ஸ்தோத்திரம் என் இயேசு ராஜா ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே ஸ்தோத்திரமே உயிருள்ள நாளெல்லாமே இரக்கம் உள்ளவரே மனதுருக்கம் உடையவரே நீடிய சாந்தம், பொறுமை அன்பு நிறைந்து வாழ்பவரே துதிகன மகிமையெல்லாம் உமக்கே செலுத்துகிறோம் மகிழ்வுடன் ஸ்தோத்திரபலிதனை செலுத்தி ஆராதனை செய்கிறோம் கூப்பிடும் யாவருக்கும் அருகில் இருப்பவரே உண்மையாய் கூப்பிடும் குரல்தனை கேட்டு விடுதலை தருபவரே உலகத்தோற்ற முதல் எனக்காய் அடிக்கப்பட்டீர் துரோகியாய் வாழ்ந்த என்னையும் மீட்டு புதுவாழ்வு தந்து விட்டீர்

N

Naan Enna Seiyavendum

நான் என்ன செய்ய வேண்டுமென்று நான் என்ன செய்ய வேண்டுமென்று சொல்லித் தாரும் தெய்வமே அதை செய்து முடிப்பதற்கு சக்தி தாரும் தெய்வமே எதை நான் பேச வேண்டும் என்று கற்றுத் தாரும் தெய்வமே எங்கு நான் செல்ல வேண்டும் என்று வழிநடத்தும் தெய்வமே எதற்காக ஜெபிக்க வேண்டும் என்று அறிவுரை சொல்லும் தெய்வமே உம்மைப்போல சேவைகள் செய்வதற்கு அருள்தாரும் தெய்வமே ஜெபம் செய்யும்போது பதிலளிக்கும் பரலோக தந்தையே ஆபத்து நேரும் உதவி செய்யும் அன்புள்ள தெய்வமே

Y

Yesu Namakku Vendum

இயேசு நமக்கு வேண்டும் இயேசு நமக்கு வேண்டும் அவர் அன்பு நமக்கு வேண்டும் எவரையும் ஏற்றுக்கொள்ளும் தெய்வம் நமக்கு வேண்டும் பிரிந்து வாழ்பவர்கள் இணைய வேண்டும் ஒற்றுமை மலர வேண்டும் குடும்பத்தில் பிளவுகள் ஒழிய வேண்டும் ஒரு மனம் வளர வேண்டும் அன்பின் எல்லையை சிலுவையிலே காட்டிய இயேசு அதற்கு வேண்டும் மன்னிக்கும் மனப்பான்மை வளர வேண்டும் சமரச சிந்தை வேண்டும் மன்னிப்பு கேட்கும் மனமும் வேண்டும் மனத்தாழ்மை வளரவேண்டும் அன்பின் எல்லையை சிலுவையிலே காட்டிய இயேசு…