E

Ennai Maravaa

என்னை மறவா இயேசு நாதா என்னை மறவா இயேசு நாதா உந்தன் தயவால் என்னை நடத்தும் வல்ல ஜீவ வாக்குத்தத்தங்கள் வரைந்தெனக்காய் ஈந்ததாலே ஸ்தோத்திரம் ஆபத்திலே அருந்துணையே பாதைக்கு நல்ல தீபமிதே பயப்படாதே வலக்கரத்தாலே பாதுகாப்பேன் என்றதாலே ஸ்தோத்திரம் பாசம் என் மேல் நீர் வைத்ததினால் பறிக்க இயலாதெவரு மென்னை திக்கற்றோராய்க் கை விடேனே கலங்கிடீரே என்றதாலே ஸ்தோத்திரம் நீ அறியா யாதும் நேரிடா என் தலை முடியும் எண்ணினீரே உனக்கெதிராய் எழும்பும் ஆயுதம் வாய்த்திடாதே என்றதாலே…

K

Kolgatha Kolaimaram

கொல்கதா கொலைமரம் கொல்கதா கொலைமரம் பார்க்கவே பரிதாபம் துங்கன் இயேசு நாதனார் தொங்கும் காட்சி பார் இதோ கை காலில் ஆணி பீறிட்டே குருதி புரண்டு ஓடிற்றே முள்ளினால் ஓர் கிரீடமே சூட்டினார் மா பாதகர் பாவியே நீயும் ஓடி வா பாசம் கொண்டே அழைக்கிறார் சிலுவைக் காட்சி காண வா சீரடைவாய் நாடி வா கல்வாரி நாதர் இயேசுவை பற்றி நீயும் வந்திட்டால் தூசியான உன்னையும் மேசியா கைத் தூக்குவார்

A

Aananthamaaga Anbarai

ஆனந்தமாக அன்பரைப் பாடுவேன் ஆனந்தமாக அன்பரைப் பாடுவேன் ஆசையவரென் ஆத்துமாவிற்கே ஆனந்தனந்தமாய் ஆசிகளருளும் ஆண்டவர் இயேசு போல் யாருமில்லையே இயேசுவல்லால் இயேசுவல்லால் இன்பம் இகத்தில் வேறு எங்குமில்லையே இயேசுவல்லால் இயேசுவல்லால் இன்பம் வேறெங்குமில்லையே தந்தை தாயும் உன் சொந்தமானோர்களும் தள்ளிடினும் நான் தள்ளிடுவேனோ தாங்கிடுவேனென் நீதியின் கரத்தால் தாபரமும் நல்ல நாதனுமென்றார் கிறிஸ்து இயேசு பிரசன்னமாகவே கிருபையும் வெளியாகினதே நீக்கியே சாவினை நற்சுவிசேஷத்தால் ஜீவன் அழியாமை வெளியாக்கினார் ஒப்பில்லாத நம்பிக்கை சந்தோஷமும் மகிழ்ச்சியின் கிரீடமாகவே அப்போஸ்தலர் தம்…

U

Um Sithampol

உம் சித்தம் போல் என்னை உம் சித்தம் போல் என்னை என்றும் தற்பரனே நீர் நடத்தும் என் சித்தமோ ஒன்றும் வேண்டாம் என் பிரியனே என் இயேசுவே திருமார்பில் நான் சாய்ந்திடுவேன் மறுபிறையான காலம் வரை பரனே உந்தன் திரு சித்தத்தை அறிவதல்லோ தூய வழி அக்னி ஸ்தம்பம் மேக ஸ்தம்பம் ஆம் இவற்றால் நீர் நடத்தும் இராவு பகல் கூட நின்று என்றென்றுமாய் நடத்திடுமே

T

Thollaigal Kashdangal

தொல்லைகள் கஷ்டங்கள் சூழ்ந்திடும் தொல்லைகள் கஷ்டங்கள் சூழ்ந்திடும் துன்பம் துக்கம் வரும் இன்பத்தில் துன்பம் தோன்றிடும் இருளாய்த் தோன்றும் என்றும் சோதனை வரும் நேரத்தில் சொற் கேட்கும் செவியிலே பரத்திலிருந்து ஜெயம் வரும் பரனுன்னைக் காக்க வல்லோர் காக்கும் வல்ல மீட்பர் உண்டெனக்கு உண்டெனக்கு உண்டெனக்கு காக்கும் வல்ல மீட்பர் உண்டெனக்கு காத்திடுவார் என்றுமே ஐயமிருந்ததோர் காலத்தில் ஆவிக் குறைவால் தான் மீட்பர் உதிரப் பெலத்தால் சத்துருவை வென்றேன் என் பயம் யாவும் நீங்கிற்றே இயேசு கை…

A

Athimaram Thulirvidaamal Ponalum

அத்திமரம் துளிர்விடாமற்போனாலும் அத்திமரம் துளிர்விடாமற் போனாலும் திராட்சைச் செடி பழம் கொடாமற் போனாலும் ஒலிவ மரம் பலனற்றுப் போனாலும் நான் இயேசுவுக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன் வயல்களிலே தானியமின்றிப் போனாலும் மந்தையிலே முதலற்றுப் போனாலும் தொளுவத்திலே மாடுகளின்றிப் போனாலும் – நான் இயேசுவுக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன் நதிகளிலே தண்ணீர் வற்றிப் போனாலும் நாவறண்டு நான் மயங்கி வீழ்ந்தாலும் உடலழிந்து உயிர்பிரிந்து போனாலும் இயேசுவுக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன்

Y

Yesai Nambithaan

இயேசு நம்பி தான் நான் இயேசு நம்பி தான் நான் வாழ்ந்திருக்கேன் அவர் பேச்சை நம்பித்தான் நான் வளர்ந்திருக்கேன் இயேசு வாக்குத்தத்தம் என் நெஞ்சிலே அது வந்து வந்து தேத்தும்மா தாய் என்னை மறந்தாலும் இயேசு நான் உன்னை மறவேன் என்றார் தந்தை என்னை வெறுத்தாலும் என் இயேசு தாங்கி சுமப்பேன் என்றார் பந்தங்கள் சொந்தகள் பாரினில் மாறிடும் பரமன் இயேசுவோ என்றென்றும் மாறிடாரே உலகம் முடிவு பரியந்தம் நான் உன்னோடு இருப்பேன் என்றார் இந்த உலகம்…

K

Kadavul Undu

கடவுள் உண்டு தான் கடவுள் உண்டு தான் அதுவும் ஒன்று தான் கற்பனையில் உருவாகும் கல்லும் மண்ணும் கடவுளல்ல மடமை என்று ஓர் மடத்தின் மண்டபத்தின் மலை உச்சியில் உடமையும் பொருள் கொடுத்து முடியும் பண்டிகை கடவுளல்ல கூழுக்கு வழியில்லா மக்கள் விதி மட்கி மாளும் போது ஆளுக்கொரு தெய்வம் என்று நாளுக்கொரு சடங்குகள் ஏன் உள்ளத்தின் அன்பாகி உலகத்தின் ஒளியான எள்ளத்தும் களமில்லா இயேசுவே கடவுள் என்போம் பாவத்தை கண்ணீராக பருகுகின்ற மாந்தர்களின் சாபத்தை தொலைப்பதற்கு…

Y

Yesu Thevan

இயேசு தேவன் இருக்கும் போது இயேசு தேவன் இருக்கும் போது இன்னல் நமக்கேது இருள் அகற்றும் அருள் மொழியாம் கிறிஸ்து புகழ் பாடு கருணையுள்ள தேவன் நம்ம கர்த்தர் இயேசு ராஜன் – 2 கொல்கொதா குருசினில் பொங்கும் இயேசு குருதியால் நம் பாவம் நீங்கும் கல்லான இதயங்கள் மாறும் நல்ல கனிவான உள்ளம் உருவாகும் மனமாற்றம் மறுரூபம் மகிமையும் அடைந்திடுவோம் புவிவாழ்வு முடிகையிலே பொன்னகரம் சேர்ந்திடுவோம் தூதர்கள் சூழ கரம் தனிலே துன்பங்கள் நீங்கி வாழ்ந்திடுவோம்…

M

Manithanae Manithanae

மனிதனே மனிதனே மனிதனே மனிதனே மறவாதே இயேசுவை உன்னை மீட்க தன்னை தந்த இயேசு உன்னை அழைக்கின்றார் இயேசு உன்னை அழைக்கின்றார் இயேசு உன்னை அழைக்கின்றார் இயேசு உன்னை அழைக்கின்றார் சிரசில் முள்முடி தரித்த முகத்தை சிலுவை மரத்தில் காணாயோ உனக்காய் மரித்தார் உத்தமர் இயேசு உன்னில் அவர்க்கு இடமில்லையோ கால்களில் ஆணிகள் கரங்களில் ஆணிகள் காயம் ஏற்ற கரம் நீட்டி கனிவாய் உன்னை அழைக்கின்றார் கர்த்தர் உன்னை அழைக்கின்றார் நிலையில்லா உன் ஜீவன் காக்க விலையில்லா…